தி.நகர், தி.நகர் நடை மேம்பாலப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 'லிப்ட்' அமைக்கும் பணிகள் மட்டும் மந்தமாக நடைபெற்று வருகின்றன.
தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் இடைப்பட்ட தெருக்களில், எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இப்பகுதிகளில் நெருக்கடியைத் தவிர்க்க, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கடந்த 2019ல் 30 கோடி ரூபாய் செலவில், 13 அடி அகலம், 600 மீட்டர் நீளத்தில் நடை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்கியது.
கொரோனா ஊரடங்கால் கிடப்பில் போடப்பட்ட பணி மீண்டும் துவக்கப்பட்டு, தற்போது இரும்பு கூரை மற்றும் நகரும் படிக்கட்டு ஆகியவை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளன.
மேலும், இரு பகுதிகளில் 'லிப்ட்' அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன.
நடை மேம்பாலப் பணிகள் 90 சதவீதம் முடிந்துள்ளதாகவும், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.