சென்னை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான, '28ஏ' வழித்தட பேருந்து, எழும்பூரில் இருந்து மணலி புதுநகருக்கு இயக்கப்படுகிறது.
இந்த பேருந்தில், சென்ட்ரலில் ஏறிய பெண் பயணிக்கு, அந்த பேருந்தில் நடத்துனராக இருந்த சிவசுதன், இலவச பயணச்சீட்டு வழங்காமல், தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆப்ரகாம், திருவொற்றியூர் பணிமனையைச் சேர்ந்த சிவசுதனை, தற்காலிக பணி இடைநீக்கம் செய்துள்ளார்.
''இதேபோல, பயணியரை மரியாதைக் குறைவாக நடத்தவோ, கவனமின்றி கண்ணியக் குறைவான வார்த்தைகளால் பேசவோ கூடாது. இதுகுறித்த புகார்கள் வந்தால் ஓட்டுனர், நடத்துனர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அன்பு ஆப்ரகாம் எச்சரித்துள்ளார்.