ஆவடி, திருவேற்காடு அடுத்த, அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார், 21, உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம், 10ம் வகுப்பு பயிலும் மாணவியிடம், சசிகுமார் பேசி கொண்டிருந்தார்.
இதை பார்த்த பள்ளியின் முதல்வர், சந்தேகத்தின்பேரில் சசிகுமாரின் மொபைல் போனை வாங்கி பார்த்தார். அதில் சிறுமியின் ஆபாச படங்கள் இருந்தன. இதுகுறித்து முதல்வரின் புகாரின்படி, போரூர் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் சசிகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.