அம்பத்துார், அம்பத்துார், கள்ளிக்குப்பம், பசும்பொன் நகர் 2வது அவென்யூவைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் தர்ஷித், 5. சிறுவன் தர்ஷித், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, உணவுக்கழிவுக்காக சண்டையிட்ட தெருநாய்கள், அந்த சிறுவனை கடித்து குதறின. அதில், பலத்த காயமடைந்த சிறுவன், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
சென்னை, அம்பத்துார், ஒரகடம், கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, புதுார் சுற்றுவட்டாரங்களில், தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஒவ்வொரு தெருவிலும், 20க்கும் மேற்பட்ட நாய்கள் திரிகின்றன.
அவற்றால், அங்கு வசிக்கும் மக்கள் நிம்மதி இழந்துள்ளனர். உணவுக்கழிவுகளுக்காக சண்டையிடும் தெருநாய்கள், அவ்வப்போது சிறுவர், முதியவர்களை விரட்டி கடித்து காயப்படுத்துகின்றன.
இது குறித்து பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும், தெருநாய்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.