திரு.வி.க., நகர், திரு.வி.க., நகர், குமரன் நகர் 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ், 38. இவரது மனைவி பானுப்ரியா, 30; இரு குழந்தைகள் உள்ளனர். அனைவரும் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாங்கினர். அதிகாலை 4:00 மணி அளவில், கண் விழித்த பானுப்ரியாவின், 3 சவரன் செயின் மாயமாகி இருந்தது.
கணவரை எழுப்பி, தாலி செயின் எங்காவது விழுந்துள்ளதா என, வீடு முழுக்க தேடிப்பார்த்தார். அதன் பின், வீட்டின் கதவு திறந்திருப்பது தெரிந்தது. மர்மநபர், கதவை திறந்து வீட்டிற்குள் நுழைந்து, தாலி செயினை திருடியது தெரியவந்தது. இது குறித்து, திரு.வி.க., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.