ராயபுரம், அம்பத்துாரைச் சேர்ந்தவர் மனோஜ் பிரபாகர், 32. இவர் ஆட்டோ மொபைல் ஷோரூமில் வேலை செய்து வருகிறார்.
நேற்று மாலை வீட்டிற்கு ராயபுரம் மேம்பாலம் வழியாக காரில் சென்றபோது, பைக்கின் முன்னால் சென்ற வாலிபர் காருக்கு வழி விடாததால், மனோஜ் பிரபாகர் திட்டி உள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த வாலிபர், காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து தப்பினார். இதுகுறித்து ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.