திருவொற்றியூர், சென்னை, எண்ணுார் விரைவு சாலை, சுங்கசாவடி முதல் பாரதியார் நகர் வரை, 5 கி.மீ., துாரத்திற்கு உள்ளன. இரு அணுகு சாலைகளுடன், நா ன்கு வழியான சாலையில், தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
மாதவரம், மீஞ்சூர், விச்சூர், மணலி, மணலிபுதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சரக்கு பெட்டக முனையங்களில் இருந்து, சென்னை து றைமுகம் நோக்கி செல்லும் டிரெய்லர் மற்றும் கன்டெய்னர் லாரிகளுக்கு, இந்த சாலையே பிரதானம்.
இந்நிலையில், நான்கு வழி சாலையில் தடுப்பு சுவர்கள், உயரம் குறைவாக இருப்பதால், கனரக வாகனங்களின் புகை போக்கியில் இருந்து வெளி யாகும் புகையால், கறுப்பாக மாறி, இருக்கும் தடம் தெரியாமல் உள்ளது.
இதன் காரணமாக, இரவு நேரங்களில் கரும்புகை படிந்த தடுப்பு சுவர்கள் தெரியாமல், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் மற்றும் கனரக வாக னங்களில், மோதி விபத்திற்குள்ளாகின்றன.
எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, வர்ணம் பூச வேண்டும். தடுப்பு சுவர்களை உயர்த்தி, மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.