ஆவடி, ஆவடி அடுத்த அருந்ததி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன், 28; கூலித் தொழிலாளி.
இவர், மனைவியுடன் நேற்று காலை, வேலைக்கு சென்று, மதியம் 2:00 மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. செங்குன்றம் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், 'டிவி, பிரிஜ்' உள்ளிட்ட பொருட்கள் தீக்கிரையாயின. ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement