பூந்தமல்லி, பூந்தமல்லி 'டிரங்க்' சாலையில், தினமும் பல்லாயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இங்கு, கிண்டி முதல் பூந்தமல்லி வரை, சென்னை 'மெட்ரோ ரயில்' பாதையின் இரண்டாம் கட்ட பணிகள் நடக்கின்றன.
இதனால், சாலையின் நடுவே இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதால், சாலை குறுகி, வழக்கத்தை விட அதிகளவில் வாகன நெரிசல் உள்ளது.
மேலும், சாலையின் இருபுறமும் 'பைக்' மற்றும் ஆட்டோக்கள் வரிசைக்கட்டி நிறுத்தப்படுகின்றன.
இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாவதோடு, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர், பணிக்கு செல்வோர் என, பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
சாலையில் நிறுத்தப்படும் ஆட்டோக்களில் அத்துமீறலை, போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.