தாம்பரம், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்களுக்கு, கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
ஜன., 11 முதல் 17ம் தேதி வரை, சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், ஓட்டுனர் உரிமம், பழகுனர் ஓட்னர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்களுக்கு, கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் நடந்த முகாமில், 150க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தி, சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமும் நடத்தப்பட்டது.