சேலையூர், கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதானத்தில், கஞ்சா விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சேலையூர் போலீசார், நேற்று முன்தினம், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தீபக், 31, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவமணி, 30, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஐந்து கிலோ கஞ்சாவை, போலீசார் பறிமுதல் செய்தனர்.