மரக்காணம் : மரக்காணம் அருகே நடந்து சென்றவர்கள் மீது பைக் மோதி கீழே விழுந்து படுகாயமடைந்த பைக் ஓட்டிச் சென்றவர் இறந்தார்.
மரக்காணம் அடுத்த கூனிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 46; இவர், கூனிமேட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி பைக்கில் சென்றார்.
அப்போது, புதுச்சேரி நோக்கி நடந்து சென்ற அதே ஊரைச் சேர்ந்த சரினாபீ, 36; முஜிபா, 52; ஆகியோர் மீது ஏழுமலை ஓட்டிச் சென்ற பைக் மோதியது.
இதில் 3 பேரும் படுகாயமடைந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு ஏழுமலை இறந்தார்.
மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.