கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தியது தொடர்பாக 50 பேர் மீதுபோலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துபவர்களால் பல்வேறு இடங்களில் தகராறு, கிராமமக்களுக்கிடையே மோதல், பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் உட்பட பல்வேறுபிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.
இதனைத் தடுக்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது இடங்களில்அமர்ந்து மது அருந்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீசார் மப்டியில் சென்று கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் போலீசார் மேற்கொண்ட சோதனையில் பொது இடங்களில் மது அருந்தியது தொடர்பாக50 பேர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பொதுஇடங்களில் மது அருந்துவதைத் தடுப்பதற்கு போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாவட்டத்தில், இரவு நேரங்களில் சுற்றித் திரியும் நபர்கள் மீதும்சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.