செஞ்சி : செஞ்சி அடுத்த அனந்தபுரத்தில் 100 நாள் வேலை வழங்குவதில் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாகக் கூறி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் சோதனை முறையில் செஞ்சி அடுத்த அனந்தபுரம் பேரூராட்சில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பொது மக்கள் 100 நாள் வேலை செய்து வருகின்றனர்.
இதில் பாரபட்சத்துடன் ஒரு பகுதிக்கு அதிக நாட்களும், ஒரு சில பகுதிக்கு குறைந்த நாட்களும் வேலை வழங்குவதாகக் கூறி 14வது வார்டைச் சேர்ந்த பொது மக்கள் அனந்தபுரத்தில் பஸ் நிறுத்தம் அருகே செஞ்சி ரோட்டில் நேற்று காலை 9:00 மணிக்கு சாலை மறியல் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களை சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, 9:20 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்னர்.