விழுப்புரம் : விழுப்புரம் காகுப்பம் அரிகரபுத்திர அய்யனாரப்பன் கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி தைப்பூச விழா நடக்கிறது.
விழாவையொட்டி, காலை 10:30 மணிக்கு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. இரவு 8:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, 6ம் தேதி காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.