திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் என்.ஆர்.கே., வழக்கறிஞர் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
திருக்கோவிலுார் வழக்கறிஞர், என்.ஆர்.கே.ராதாகிருஷ்ணன், ஆஸ்பிட்டல் ரோடு, குணா தில்லை காம்ப்ளக்சில் புதிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது. வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார், நகர மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் சம்பத் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ராமதாஸ் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். வழக்கறிஞர் வீராசெல்வராஜ் குத்துவிளக்கேற்றினார்.
தி.மு.க., நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், நகர அவைத் தலைவர் குணா, கவுன்சிலர் பூபதி, இந்திய கம்யூ., முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன், பா.ம.க., மாவட்ட செயலாளர் பாலசக்தி, வழக்கறிஞர்கள் ரஜினிகாந்த், தீர்த்தமலை, செந்தில்குமார், உமாசங்கர், ராஜ்குமார், ரங்கநாதன், ராமதாஸ், ராகவன், சுரேஷ்குமார், மோகன் உட்பட பலர் பங்கேற்றனர். பாலாஜி நன்றி கூறினார்.