கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அரசு ஐ.டி.ஐ., செல்லும் சாலையோரம் திறந்த நிலையில் உள்ள கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னசேலத்திலிருந்து பாண்டியங்குப்பம் செல்லும் சாலையில் அரசு ஐ.டி.ஐ., உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்த சாலையோரத்தில், விவசாய கிணறு திறந்த நிலையில் உள்ளது. தடுப்புச் சுவர் இல்லாமல் உள்ள கிணறு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடக்க வேண்டிய நிலை உள்ளது. வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு கிணறு இருப்பது தெரியாமல் விபத்து நேரிட வாய்ப்பு உள்ளது. எனவே, சாலையோர திறந்த வெளிக் கிணற்றை சுற்றி தடுப்புச் சுவர் மற்றும் எச்சரிக்கை தகவல் பலகையும் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.