சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற வேண்டுகோள்
சித்தாமூர் அருகே, பூங்குணம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரம் உள்ள மின் கம்பம், சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு, சேதமடைந்து விபத்து ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படுவதற்குள், மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
- ச.சதிஷ், பூங்குணம் கிராமம்.
தாழ்வான மின் கம்பிகளால்
விபத்து அபாயம்
கடப்பாக்கம் அருகே, நயினார்குப்பம் கிராமத்தின் பழைய எல்லையம்மன் கோவில் தெருவில், குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகள், செடி, கொடிகள் படர்ந்து, தாழ்வாக செல்கின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்து ஏற்படும் அபாயத்தில் உள்ளனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கா.சுரேஷ், நயினார்குப்பம் கிராமம்.
பள்ளி கட்டடத்தின் மேல்
செழித்து வளரும் மரங்கள்
மறைமலை நகர் நகராட்சி, திருக்கச்சூர் பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர்.
இதில் உள்ள பள்ளிக் கட்டடம் ஒன்றின் மேல் தளத்தில், மரங்கள் வளர்ந்துள்ளன. அவற்றை துவக்கத்திலேயே அகற்றாவிடில், கட்டடம் சேதம் அடையும் நிலை உள்ளது. எனவே, அவற்றை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிராம மக்கள், திருக்கச்சூர்.