மரக்காணம் : மரக்காணம் அருகே 7 கோடி ரூபாய் மதிப்பில் இருவழிச் சாலைப் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்.
மரக்காணம் அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தில் இருந்து கோனேரிகுப்பம் வரை உள்ள 4 கி.மீ., சாலையை இருவழிச் சாலையாக அகலப்படுத்துதல், பழைய பாலங்களை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டுதல் போன்ற பணிக்களுக்காக அரசு 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
இதற்கான பூமி பூஜை நேற்று ஆலங்குப்பம் கிராமத்தில் நடந்தது. அமைச்சர் மஸ்தான் பூமி பூஜையில் பங்கேற்று பணியை துவக்கி வைத்தார்.சேர்மன் தயாளன், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.