திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியம், படூர் ஊராட்சியில், 3,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு, ஊராட்சி நிர்வாகம் சார்பில், டெங்கு, மலேரியா போன்ற நோய்களைத் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, படூர் ஊராட்சி பணியாளர்கள் வாகனத்தில் இயந்திரத்தை வைத்து, வீதி வீதியாக கொசு மருந்து தெளித்து வருகின்றனர்.
துாய்மை குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்; வீடுகளில் உள்ள தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று, அறிவுறுத்தப்பட்டுள்ளது.