காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் வார்டான, 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு சவுராஷ்டிரா தெரு, உடையார் தெரு, பாலாஜி நகர் சந்திப்பில், உள்ள மினி டேங்க் அருகில் குப்பை குவியலாக இருந்தது.
அதேபோல, திருக்காலிமேடு சாலியர் தெருவில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவதால், கிழக்கு பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கால்வாய் முழுதும் நிரம்பி, வீட்டு உபயோக கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் சாலையில் வழிந்தோடியது.
இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
இதைதொடர்ந்து மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், திருக்காலிமேடில் நேற்று காலை ஆய்வு செய்தார். குவியலாக கிடந்த குப்பை அகற்றப்பட்டது.
இதுகுறித்து துணை மேயர் குமரகுருநாதன் கூறியதாவது:
திருக்காலிமேடு சாலியர் தெருவில் கால்வாய் கட்டுமானப்பணி ஓரிரு நாளில் நிறைவு பெற்றவுடன், வழக்கம்போல கழிவு நீர் வெளியேற வழி ஏற்படுத்தப்படும்.
இப்பகுதிக்கு கூடுதல் துாய்மை பணியாளர் நியமிக்கவும், குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம் வழங்கவும் மாநகராட்சி மேயர் மற்றும் கமிஷனரிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement