விழுப்புரம் : திருநங்கை ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், விக்கிரவாண்டி தாலுகா, அய்யங்கோவில்பட்டை சேர்ந்த மணி மகன் இளமதி என்பவருக்கு திருநங்கை ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் மோகன் வழங்கினார்.
கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை கலெக்டர் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.