சின்னசேலத்தில் விடுதி கட்டியும் பயன்படாத அவலம்! ஐ.டி.ஐ., மாணவர்கள் பட்டினி கிடக்கும் பரிதாபம்

Added : ஜன 23, 2023 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் புதிதாக கட்டப்பட்ட விடுதி மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதாலும், சமையலர், வார்டன் நியமிக்கப்படாததாலும், மாணவர்கள் 5 கி.மீ., துாரம் உள்ள விடுதியில் தங்கி பட்டினி கிடந்து படிக்கும் அவலம் உள்ளது.சின்னசேலத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் அரசு ஐ.டி.ஐ., உள்ளது. பாண்டியங்குப்பம் செல்லும் சாலையில் உள்ள
சின்னசேலத்தில் விடுதி கட்டியும் பயன்படாத அவலம்! ஐ.டி.ஐ., மாணவர்கள் பட்டினி கிடக்கும் பரிதாபம்

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் புதிதாக கட்டப்பட்ட விடுதி மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதாலும், சமையலர், வார்டன் நியமிக்கப்படாததாலும், மாணவர்கள் 5 கி.மீ., துாரம் உள்ள விடுதியில் தங்கி பட்டினி கிடந்து படிக்கும் அவலம் உள்ளது.

சின்னசேலத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் அரசு ஐ.டி.ஐ., உள்ளது. பாண்டியங்குப்பம் செல்லும் சாலையில் உள்ள இந்த ஐ.டி.ஐ., 2014ம் ஆண்டு துவங்கப்பட்டது.

இங்கு, எலக்ட்ரீஷியன், பிட்டர், எம்.எம்.வி., ஒயர்மேன், வெல்டர் என 5 பிரிவுகளில் ஆண், பெண் என 198 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

ஒரு முதல்வர் (பொறுப்பு) மற்றும் ஆசிரியர்கள் என 27 பேர் பணிபுரிகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு ஐ.டி.ஐ., வளாகத்திற்குள் மாணவர்களுக்கான விடுதி கட்டப்பட்டது.

ஆனால், விடுதி பயன்பாட்டிற்கு வராததால், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் 5 கி.மீ., தொலைவில் சின்னசேலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

சொந்த கட்டடத்தில் விடுதி துவங்கப்பட்ட போதிலும் சமையலர் மற்றும் வார்டன் என ஒருவரும் நியமிக்கப்படவில்லை.

மேலும், விடுதிக்கென கூடுதல் நிதியும் வழங்கப்படாமல் இருந்ததால் விடுதி கட்டுமானம் முடிந்தும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு வராமலேயே உள்ளது.

இந்நிலையில், கொரோனா தாக்கம் துவங்கியதால் இங்குள்ள விடுதியில் மாணவர்கள் யாரும் தங்க முடியாமல் போனது.

பூட்டிக்கிடந்த இந்த மாணவர் விடுதியினை கடந்த 9 மாதங்களுக்கு முன் மாவட்ட காவல் துறையினர், திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆயுதப்படை போலீசார் தங்குவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது முழுமையாக காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், கொரோனாவிற்கு பின், கடந்த 6 மாதங்களாக ஐ.டி.ஐ., மீண்டும் இயங்க துவங்கியது. தினமும் 198 மாணவ, மாணவிகள் இங்கு வந்து கல்வி பயின்று செல்கின்றனர்.

ஆனால், விடுதி மாணவர்கள், சின்னசேலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மாணவர் விடுதியில் தங்கியிருப்பதால், பஸ் வசதி இல்லாததாலும், 5 கி.மீ., துாரம் செல்ல வேண்டியிருப்பதாலும் மதியம் சாப்பிட முடியாமல் பட்டினி கிடந்து அவதிக்குள்ளாகின்றனர்.

வகுப்பு நேரம் முடிந்து விடுதிக்குச் சென்று, இரவு ஒரு வேலை மட்டுமே சாப்பிடும் அவலம் உள்ளது. இதனால் விடுதி மாணவர்களின் கல்வி பாதித்து வருகிறது.

எனவே, ஐ.டி.ஐ., வளாகத்தில், மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாணவர் விடுதியை மீட்டு, மாணவர்கள் பயன்படுத்தவும், ஐ.டி.ஐ.,க்கு நிரந்த முதல்வர் மற்றும் சமையலர், வார்டன் பணியிடங்களை நிரப்ப கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X