பழநி, :பழநி மலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 27ல் நடைபெற உள்ளதை முன்னிட்டு நேற்று வேள்வி சாலை பூஜைகள் துவங்கின.
திண்டுக்கல் மாவட்டம், பழநி கோவில் படிப்பாதை கோவில்களுக்கு வரும், 26ல், மூலவருக்கு, 27ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.இதை முன்னிட்டு நேற்று காலை, 6:00 மணிக்கு சூரிய ஒளியிலிருந்து நெருப்பு எடுக்கப்பட்டு பிரகாரம் வழியாக வேள்வி சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
காலை, 9:00 மணிக்கு மலைக்கோவில் படிப்பாதை, உபகோவில் சன்னிதிகளுக்கு
அஷ்டபந்தன மருந்து சாத்தல் நடந்தது.மாலை, 6:30 மணிக்கு கருவறை நிறைகுடங்கள் அலங்கரித்தல், ஆனந்த விநாயகர், கைலாசநாதர், மலைக் கொழுந்தம்மன், மலைக்கொழுந்தீஸ்வரர், வள்ளி, தெய்வானை, சண்முகர்.
மேலும், சின்ன குமாரர், தண்டாயுதபாணி சுவாமி சன்னிதி, தங்க விமானம், ராஜகோபுரம், சண்டிகேஸ்வரர் கோவிலின் குடங்களை அலங்கரித்து கருவறை அருள் சக்தி குடங்களில் எழுந்தருள, கருவறையிலிருந்து வேள்விச்சாலைக்கு குடங்கள் எழுந்தருள செய்தல் நடந்தது.
பின் முதல் கால வேள்வி துவங்கியது. வரும், 27 வரை மூலவர் சன்னிதியில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. வேள்விச் சாலையில் அருட்சக்தியை தரிசிக்கலாம்.
இன்று காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை வேள்வி சாலையில் நடக்கும். இதனுடன் கந்தபுராணம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், திருமுறை முற்றோதல், காலை, 11:45 மணிக்கு நிறைவேள்வி நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement