செஞ்சி : எய்யில் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிரிக்கெட் விளையாட்டு போட்டி நடந்தது.
அம்பேத்கர் கிரிக்கெட் கிளப் சார்பில் 7ஆம் ஆண்டு பொங்கல் கிரிக்கெட் போட்டிகள் எய்யில் கிராமத்தில் நடந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கும், பங்கேற்றவர்களுக்கும் அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் அருண்தத்தன் பரிசு வழங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் செந்தாமரை கெம்பீரம், எய்யில் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் குழு நிர்வாகிகள் பங்கேற்றனர்.