திண்டிவனம் : திண்டிவனத்தில் நகராட்சிக்கு வரி பாக்கி வைத்திருந்த 4 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திண்டிவனம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி 12 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. இதன் தொடர்ச்சியாக அதிக அளவில் வரி பாக்கி வைத்துள்ளவர்களின் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் குபேந்திரன் முன்னிலையில், திண்டிவனம் ஜெயபுரம் ரவுண்டானா பகுதியில் உள்ள ஜூஸ் கடைக்கு கமிஷனர் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
இதேபோல் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வணிக வளாகத்தில் உள்ள 3 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.