கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 87.59 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த பொருட்களை விற்பனை செய்வதற்காக மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று மக்காச்சோளம் 1,500 மூட்டைகள், உளுந்து 800, வரகு 30, வேர்க்கடலை, பாசிப்பயறு, தட்டைப் பயறு தலா 5, கம்பு 4, ராகி ஒரு மூட்டை என 467 விவசாயிகள் 2,350 மூட்டை விளைபொருட்களைக் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை மக்காச்சோளம் 2,130 ரூபாய்க்கும், உளுந்து 6,679, வரகு 3,007, மணிலா 8041, பாசிப்பயறு 6832, தட்டைப்பயறு 5459, கம்பு 7035, ராகி 1599 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக ரூ.87 லட்சத்து 59 ஆயிரத்துக்கு ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
சின்னசேலம்
சின்னசேலம் மார்க்கெட் கமிட்டியில் 230 மக்காச்சோளம் மூட்டைகளை 26 விவசாயிகள் விற்பனைக்காக நேற்று கொண்டு வந்தனர். சராசரியாக ஒரு மூட்டை 2,219 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமாக 5 லட்சத்து 12 ஆயிரத்து 376 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.