மயிலம், : மயிலம் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான பாட புத்தகம், எழுதுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
மயிலம் வட்டார வள மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வள மைய மேற்பார்வையாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பாசிரியர் செந்தில் ராஜா, ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். ஆனந்தி வரவேற்றார். மயிலம் ஒன்றியத்தில் 74 மையங்களில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத மாணவர்களுக்கு தினசரி 2 மணி நேரம் கற்றல், கற்பித்தல் பயிற்சி நடந்து வருகிறது.
இதற்கான எழுது பொருட்கள் மற்றும் புத்தகம், சிலேட் உள்ளிட்டவைகளை வள மைய மேற்பார்வையாளர் தட்சணாமூர்த்தி தலைமை ஆசிரியர்கள் ஸ்ரீவித்யா, நீலா, ஜானகி ஆகியோரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளமைய ஆசிரியர்கள் சுப்ரமணி, முருகன், சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.