கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சாமியார்மடம் பகுதியில் காவல் துறை சார்பில் புதிதாக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நகர பகுதிக்குள் வரும் வாகனங்கள் மற்றும் நகர பகுதியில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை கண்காணிக்கவும், பைக் வாகன தணிக்கையில் ஈடுபடும் நோக்கத்திலும் சாமியார் படம் பகுதியில், புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.