அமெரிக்காவில் வேலையிழந்த இந்தியர்கள் பரிதவிப்பு

Updated : ஜன 24, 2023 | Added : ஜன 24, 2023 | கருத்துகள் (33) | |
Advertisement
வாஷிங்டன்,:அமெரிக்காவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளதால் வேலை இழந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள், அடுத்தது என்ன செய்வது என்பது தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு, எச்௧பி, எல் - ௧ போன்ற 'விசா'க்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில்
 அமெரிக்கா வேலை ,இந்தியர்கள் பரிதவிப்பு



வாஷிங்டன்,:அமெரிக்காவில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளதால் வேலை இழந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள், அடுத்தது என்ன செய்வது என்பது தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு, எச்௧பி, எல் - ௧ போன்ற 'விசா'க்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது.


latest tamil news


தற்போது, அமெரிக்கா கடும் பொருளாதார மந்தநிலையில் சிக்கியுள்ளதால், அங்குள்ள 'கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான்' உட்பட பல பெரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன.

கடந்தாண்டு நவ.,ல் இருந்து இதுவரை, இரண்டு லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

வேலை இழந்தவர்களில், 30 - 40 சதவீதம் பேர் இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் என கூறப்படுகிறது.வேலையை இழந்த இவர்கள் அடுத்தது என்ன செய்வது என்பது தெரியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

பெரும்பாலான நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளதால், புதிய வேலை உடனடியாக கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை.எச்௧பி விசா நிபந்தனையின்படி, வேலையை இழப்பவர் மற்றும் மாறுபவர், ௬௦ நாட்களுக்குள் புதிய நிறுவனத்தில் பணியில் சேர வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் தாய்நாடு திரும்ப வேண்டும்.

தற்போது வேலையை இழந்துள்ள இந்தியர்கள், புதிய வேலைக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளின் படிப்பு, வாங்கிய சொத்துக்கள் என, இவர்கள் பல பிரச்னைகளை சமாளிக்க வேண்டியுள்ளது.

பெரும் அளவில் ஆள்குறைப்பு நடந்துள்ளதால், விசா கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்தித் தரும்படி, அமெரிக்க வாழ் இந்தியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதற்கிடையே வேலையை இழந்த இந்தியர்கள், 'வாட்ஸ்ஆப்' செயலியில் தனிக்குழுவை உருவாக்கியுள்ளனர். எங்கெங்கு வேலை வாய்ப்புகள் உள்ளன என்ற தகவல்களை பரிமாறி வருகின்றனர்.

மேலும், விசாவை மாற்றிக் கொள்வது குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (33)

sankar - chennai,இந்தியா
29-ஜன-202321:18:40 IST Report Abuse
sankar பேராசை பெருநஷ்டம் நம்மஊர்லேயே மனதிருப்தியோடு இருந்திருந்தால் இப்படியெல்லாம் வந்திருக்குமா
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
24-ஜன-202319:35:41 IST Report Abuse
g.s,rajan எதுவும் சில காலம்....
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
24-ஜன-202319:23:15 IST Report Abuse
g.s,rajan இந்தியாவுக்கு வருவதற்கும் பல இந்தியர்களுக்குத் தயக்கம் ,வேலை வாய்ப்பு இங்க இல்லாததால் தானே அமரிக்கா சென்றார்கள்,அமெரிக்காவிலும் இப்போ வேலை இல்லாததால் செலவுகளும் அதிகம் என்பதால் அங்கேயும் இருக்க முடியாது, இந்தியாவில் அமெரிக்கா போல் கை நிறைய சம்பளமும் கிடைக்காது,படிப்பு மற்றும் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ற வேலைகளும் இந்தியாவில் குறைவு,பாவம் ,திரிசங்கு நிலையில் வேலை இழந்த இந்தியர்கள்... .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X