புதுடில்லி: திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 கடல் மைல்களுக்கு அப்பால் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: மீனவர்கள் தங்களது படகுகளில் உரிய டிராக்கிங் கருவியை பொருத்தியிருக்க வேண்டும். சுருக்குமடி வலையை பயன்படுத்த பதிவு செய்த படகுகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
சுருக்குமடி வலையுடன் கடலுக்குச் செல்லும் மீனர்கள் அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயம். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை 12 கடல் மைல்களுக்கு அப்பால் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சுருக்குமடி வலை உபயோகித்தல் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.