மோடியை விமர்சிக்கும் பிபிசி ஆவணப்படம்: ஜே.என்.யூ.,வில் திரையிடும் முயற்சிக்கு எதிர்ப்பு

Updated : ஜன 24, 2023 | Added : ஜன 24, 2023 | கருத்துகள் (33) | |
Advertisement
புதுடில்லி: மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பிபிசி தயாரித்த பிரதமர் மோடியை விமர்சிக்கும் ஆவணப்படத்தை டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு திரையிட திட்டமிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த பிபிசி செய்தி நிறுவனம் 'இந்தியா மோடிக்கான கேள்விகள்' என்ற தலைப்பில், இரண்டு பாகங்களாக ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.
JNU, Students Union, BBC Documentary, Screen, Planning, PM Modi, Cancel, Request, ஜேஎன்யு, டில்லி, பிபிசி ஆவணப்படம், பிரதமர் மோடி, மாணவர்கள் அமைப்பு, திட்டம், பல்கலைக்கழகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பிபிசி தயாரித்த பிரதமர் மோடியை விமர்சிக்கும் ஆவணப்படத்தை டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு திரையிட திட்டமிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த பிபிசி செய்தி நிறுவனம் 'இந்தியா மோடிக்கான கேள்விகள்' என்ற தலைப்பில், இரண்டு பாகங்களாக ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்துடன், அப்போது அங்கு முதல்வராக இருந்த மோடியை தொடர்புபடுத்தியுள்ளனர். இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 'இந்த ஆவணப்படம், இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்யும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக' வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்தது.இந்த நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலர் அபூர்வ சந்திரா, பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படத்தை பார்ப்பதற்காக சமூக வலைதளங்களில் பகிரப்படும் இணைப்புகளை முடக்க உத்தரவிட்டார். தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அவசர சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) உள்ள மாணவர்கள் அமைப்பு, மத்திய அரசால் முடக்கப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை திரையிட திட்டமிட்டு, அதனை பார்வையிட மாணவர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளது.latest tamil news

இன்று (ஜன.,24) இரவு 9 மணிக்கு இந்த ஆவணப்படத்தை திரையிட உள்ளதாக ஜே.என்.யு மாணவர் அமைப்பு அறிவித்தது. ஆனால், ஆவணப்பட ஒளிபரப்பை ரத்து செய்யுமாறு பல்கலை நிர்வாகம் மாணவர் அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது. பல்கலை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'இது போன்ற அங்கீகரிக்கப்படாத செயல்பாடு பல்கலைக்கழக வளாகத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் அல்லது தனிநபர்கள் முன்மொழியப்பட்ட இத்திட்டத்தை ரத்து செய்யுமாறு உறுதியாக அறிவுறுத்தப்படுகிறார்கள்' எனத் தெரிவித்துள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (33)

nisar ahmad -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜன-202322:15:45 IST Report Abuse
nisar ahmad தடுக்காமல் என்ன தாம்பூலம் வைத்தா வேற்பார்கள் கசாப்புக்டைகாரனின் உண்மையை புட்டு புட்டு வைத்திருக்கிறான் இங்கிலாந்துகாரன்.
Rate this:
Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
25-ஜன-202306:12:45 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayananaஅப்படியா? ரயில் பேட்டி உள்ளே அப்பாவிகளை வைத்து உயிரோடு கொளுத்தியது நல்ல செயலா ? இந்துக்கள் பின்னே குட்ட குட்ட குனிந்துகொண்டு இருக்கவேண்டுமா? ஒரே ஒரு முறை குஜராத்தி இந்துக்கள் திருப்பி கொடுத்தார்கள் அதன்பின் பாலைவன அமைதி மார்க்கம் அமைதி ஆகி விட்டது. தமிழகம், கர்நாடக இந்துக்கள் அதே மாதிரி திருப்பி கொடுக்கவேண்டும். அப்போது தன நீங்கள் அடங்குவீர்கள். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. பிடிக்கவில்லை என்ட்ரால் நீங்கள் பிரித்து வாங்கிய பாகிஸ்தானுக்கு ஓடிப்போங்கள். இங்கே இருந்தால் எங்கள் பிரதம மந்திரி யை அவமதித்தல் கூடாது....
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
24-ஜன-202321:05:50 IST Report Abuse
jagan படிக்காமல், திறமையில்லாமல் இட ஒதுக்கீடு மூலம் மாணவர்களை சேர்த்தால் இதான். JNU மூடப்பட வேண்டிய தொல்லைக்கழகம்
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
24-ஜன-202320:48:41 IST Report Abuse
jagan BBC சீனாவில் தடை செய்யப்பட்டுள்ள நிறுவனம். சீனன் எப்பவுமே ரொம்ப உஷார். நம்ம ஆளுங்களும் இருக்காங்களே. இந்தியாவில் BBC மொத்தமா தடை செய்யப்படவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X