வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஏர் இந்தியாவுக்க ரூ 10 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது கடந்த டிச.,6ம் தேதி பெண் பயணியின் இருக்கையில் சிறுநீர் கழித்த விவகாரம் குறித்து புகார் அளிக்காததால் அபராதம் விதித்துள்ளது.

கடந்த டிசம்பர் 6ம் தேதி பாரிஸ் டில்லி விமானத்தில் ஒரு பெண்ணின் காலி இருக்கையில் ஒரு ஆண் போர்வையில் சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் சம்பவத்தைப் புகாரளிக்காததற்காக ஏர் இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

சில தினங்களுக்கு முன், நவ.,26 ல் நியூயார்க் நகரில் இருந்து டில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் வகுப்பில் பயணித்த 70 வயது மதிக்கத்தக்க பெண் மீது, ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரத்தில், ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டது குறிப்பிட்டத்தக்கது. இதனால் இதே மாதத்தில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இரண்டாவது அபராதம் விதிப்பாகும்.