வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நீதித்துறையை கைப்பற்ற பா.ஜ., அரசு நினைக்கிறது என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றி்ல மத்திய சட்டத்துறை அமைச்சர் பேசுகையில், மக்கள் பிரதிநிதிகளை மக்கள் ஓட்டளித்து தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், நீதிபதிகள் தேர்தல்களை சந்திப்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.
அதனால் அவர்களை மாற்ற முடியாது. அதே நேரத்தில் வழக்குகளை கையாளும் விதம், வழங்கப்படும் தீர்ப்புகளின் அடிப்படையில், நீதிபதிகளை மக்கள் கண்காணித்து வருகின்றனர் என குறிப்பிட்டு பேசினார்.

இது குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது: நீதித்துறையை கைப்பற்ற பா.ஜ., அரசு நினைக்கிறது. இதுபோன்ற நடவடிக்கையை பொதுமக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
நாட்டில் உள்ள சுதந்திரமான அமைப்புகள் அனைத்தையும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்த பின் தற்போது மத்திய பா.ஜ., அரசு நீதித்துறையை கைப்பற்ற நினைக்கிறது. நீதித்துறை மீதான இத்தகைய தாக்குதல்கள் சரியல்ல. இவ்வாறு அவர் பேசினார்.