வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :ஆர்ஆர்ஆர் தெலுங்கு படத்தில் இடம்பெற்ற, 'நாட்டு நாட்டு...' பாடல் சிறந்த பாடலாக ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றது..
'ஹாலிவுட்' திரைப்படங்களுக்கான 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, 2023, மார்ச் 12ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இதில் ஆஸ்கர் விருதுக்காக பல்வேறு பிரிவுகளில் போட்டிக்கு அனுப்பப்பட்ட படங்களின் தேர்வு பட்டியல் இறுதி செய்யப்பட்டு தேர்வு கமிட்டி இன்று அறிவித்து.
![]()
|
இதில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய தெலுங்கு திரைப்படமான, ஆர்ஆர்ஆர் படத்தில், கீரவாணி இசையில் இடம் பெற்ற, 'நாட்டு நாட்டு...' பாட்டு, சிறந்த 'ஒரிஜினல் ஸாங்' எனப்படும், பாடலுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தவிர சிறந்த ஆவணப்படமாக தி எலிபென்ட் விஸ்பர்ஸ் படமும் தேர்வாகி உள்ளன.