மஹாராஜ்கஞ்ச்:சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம், மஹாராஜ் கஞ்ச் மாவட்டம், பாரெண்டா கிராமத்தில் 2015ம் ஆண்டு எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, பெச்சன் கெவாட் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி வினய் குமார் சிங், கெவாட்டுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.