சுல்தான்பூர்:போலீஸ்காரரை சரமாரியாக தாக்கியவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கோட்வாலி நகரில் உள்ள மாவட்ட சிறையில் கிரிஷ் சிங்,25 என்ற போலீஸ்காரர் பணியில் இருந்தார்.
சிறை வளாகத்தில் கிரிஷ் சிங் பின்பக்கமாக் இருந்து, இரும்புக் கம்பியால் யாரோ ஒருவர் தலையில் சரமாரியாக தாக்கினார்.
ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த கிரிஷ் சிங், மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறையில் உள்ள குற்றவாளிகளில் ஒருவர்தான் தாக்கியிருக்கக் கூடும் என்பதால், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.