புனே:'கே.டி.எம்., பைக்' நிறுவனம், அதன் 10 லட்சமாவது பைக்கை, ஹரியானாவின் சக்கன் பகுதியில் அமைந்துள்ள 'பஜாஜ் ஆட்டோ 'நிறுவனத்தின் தயாரிப்பு ஆலையில் இருந்து வெளியிட்டுள்ளது.
இந்த மைல்கல் வெற்றியின் வாயிலாக, கே.டி.எம்., பஜாஜ் கூட்டணி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கே.டி.எம்., ஹுஸ்க்வானா ஆகிய நிறுவனங்களை நிர்வகித்து வரும், பியரர் மொபிலிட்டி ஏ.ஜி., நிறுவனம், அதன் வாகனங்களை, பஜாஜ் ஆட்டோ நிறுவன ஆலையில் தயாரித்து வருகிறது.
அத்துடன், இந்தியாவில் 460க்கும் மேற்பட்ட கே.டி.எம்., விற்பனை மையங்களை இந்நிறுவனம் வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.