வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: உ.பி.யில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்த விபத்தில் 3 பேர் பலியாயினர்
உபி.,யில் தலைநகர் லக்னோவில் வசீர்ஹசன்கன்ஞ்ச் சாலையில் நான்குமாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இங்கு திடீரென கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் நடந்ததது.
தகவறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். கட்ட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதையடுத்து மேலும் 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.