மாருதி சுசூகி:
'மாருதி சுசூகி' நிறுவனத்தின் நிகரலாபம், கடந்த டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், இரு மடங்குக்கு மேல் அதிகரித்து, 2,351 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இக்காலக்கட்டத்தில் விற்பனை அதிகமாக இருந்ததை அடுத்து, லாபமும் அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில் மட்டும், கிட்டத்தட்ட 4.66 லட்சம் வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
டாடா கம்யூனிகேஷன்:
இந்நிறுவனத்தின் நிகரலாபம், கடந்த மூன்றாவது காலாண்டில் வீழ்ச்சியை கண்டுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, நிகர லாபம் 0.3 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
நிறுவனத்தின் நிகரGலாபம் சரிவைக் கண்டதை அடுத்து, இதன் பங்குகளின் விலை, நேற்று 4 சதவீதத்துக்கும் கூடுதலாக சரிவைக் கண்டது.
கரூர் வைஸ்யா வங்கி:
தனியார் துறை வங்கியான 'கரூர் வைஸ்யா வங்கி'யின் நிகர லாபம், கடந்த மூன்றாவது காலாண்டில் 56 சதவீதம் அதிகரித்து, 289 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் வருவாய், முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் 1,600 கோடி ரூபாயாக இருந்தது, தற்போது 2,013 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வட்டி வருவாய் மற்றும் வாராக் கடன் குறைந்தது ஆகியவை, இந்த ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி:
இவ்வங்கியின் நிகர லாபம், மூன்றாவது காலாண்டில் 62 சதவீதம் அதிகரித்து, 5,853 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில், நிகரலாபம் 3,614 கோடி ரூபாயாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில், மொத்த வருவாய் 26 ஆயிரத்து, 892 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.