சென்னை:இந்தியாவின் முன்னணி சில்லரை விற்பனை நிறுவனமான, 'ரிலையன்ஸ் டிஜிட்டல்', மீண்டும் 'டிஜிட்டல் இந்தியா சேல்' எனும் அதிரடி விற்பனையை தொடங்கியுள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் 'மொபைல் போன், டிவி' உள்ளிட்ட பல வீட்டு உபயோகப் பொருட்களை, சலுகை விலையில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வரும் ஜனவரி 29ம் தேதி வரை, அனைத்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு, 'ரிலையன்ஸ் டிஜிட்டல், மை ஜியோ ஸ்டோர்ஸ்' ஆகியவற்றில் மட்டும், 20 ஆயிரம் ரூபாய் வரை, உடனடி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, 584 லிட்டர் பிரிட்ஜ் 53 ஆயிரத்து, 990 ரூபாய்க்கு கிடைக்கும்.
ஜனவரி 26ம் தேதி வரை, 59,900 ரூபாய்க்கு 'ஐபோன் 13' கிடைக்கும். 6.5 கிலோ திறன் கொண்ட, முழு ஆட்டோமெடிக் வாஷிங் மெஷின், 11 ஆயிரத்து, 990 ரூபாய்க்கு கிடைக்கும். மேலும் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்சுகளும் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.
மேலும் வாடிக்கை யாளர்கள், அவர்களுக்கு அருகிலுள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூமை பார்வையிட, 'ஸ்டோர் பிக் அப்' சேவைகளையும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், வாடிக்கை யாளர்கள் வாங்கும் பொருட்களை, மூன்று மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யும் வசதியையும் வழங்குவதாக அறிவித்துள்ளது, ரிலையன்ஸ் டிஜிட்டல்.