புதுடில்லி:'மாருதி சுசூகி' நிறுவனம், அதன் 'கிராண்ட் விட்டாரா' எஸ்.யு.வி., கார்களில் சீட் பெல்ட் கோளாறு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறி, 11 ஆயிரத்து, 177 கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு, மாருதி விற்பனை மையத்தில் இருந்து இது குறித்து அழைப்பு வரும் என்றும், சீட் பெல்ட்டுகளில் கோளாறு ஏதேனும் இருந்தால், இலவசமாக மாற்றி அமைத்துத் தரப்படும் எனவும், இந்நிறுவனம் உறுதி வழங்கி உள்ளது.
இதேபோல கடந்த வாரம், 'ஆல்டோ கே 10, ஈக்கோ, பிரீஸ்ஸா, பலினோ' போன்ற கார்களின் காற்றுப் பைகளில் கோளாறு ஏற்பட வாய்ப்புஇருப்பதாகக் கூறி, 17 ஆயிரத்து, 362 கார்களை திரும்பப் பெறுவதாக, மாருதி சுசூகி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.