வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மயிலாடுதுறை :மயிலாடுதுறையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்எல்ஏ ராஜகுமார் தொடக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி அறுவடை பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை தடையின்றி கொள்முதல் செய்வதற்கு அரசு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் 150 கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டு படிப்படியாக அனைத்துப் பகுதிகளில் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மயிலாடுதுறை ரூரல் ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழாவில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து நெல் கொள்முதல் பணியை தொடக்கி வைத்தார்.