புனே:அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் கொண்டாடப்படும் 'டோர்கியா' பண்டிகையை முன்னிட்டு, 'ஜாவா யெஸ்டி' பைக் நிறுவனம், அதன் 'ஜாவா 42 தவாங் எடிஷன்' என்ற 'லிமிடெட் எடிஷன்' பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது லிமிடெட் எடிஷன் என்பதால், வெறும் 100 பைக்குகளை மட்டுமே வெளியிட உள்ளதாகவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஜாவா யெஸ்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் சிங் ஜோஷி கூறியதாவது:
பரந்து விரிந்து இருக்கும் கலாசாரத்துடன் இணைந்து இருக்கும் வகையிலான பைக்கு கள், சிறப்பான ஓட்டும் அனுபவத்தை தரும். அதைத் தான் ஜாவா 42 தவாங் எடிஷன் பைக்கின் வாயிலாக கொடுக்க விரும்பினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.