இம்பால்: மணிப்பூரில் பா.ஜ. பிரமுகர் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மணிப்பூர் மாநில பா.ஜ. பிரமுகர் ராமேஷ்வர்சிங், ஒய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், பா.ஜ. மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.தோபால் மாவட்டத்தில் இவரது வீடு உள்ளது.
இன்று தனது வீட்டருகே , நின்றிருந்த போது, அங்கு வந்த அடையாளர் தெரியாத இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடியது. குண்டு காயங்களுடன் ராமேஷ்வர் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் . சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.