காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் உள்ள காஞ்சி ஸ்ரீகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் நிர்மல், கடந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தார்.
கல்லுாரியின் விபத்து காப்பீடு வாயிலாக பெறப்பட்டு, இறப்பு இழப்பீடாக, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, இறந்த மாணவரின் பெற்றோரிடம் கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் நேற்று வழங்கினார். கல்லுாரி துணை முதல்வர் பிரகாஷ், வணிகவியல் துறைத்தலைவர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.