காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன் ஒரு வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தது மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதில் தொடர்புள்ள முக்கிய குற்ற வாளியான தாயார்குளம் பகுதியை சேர்ந்த பரிவட்ட விக்கி, 27. என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு தாயார்குளம் வேகவதி ஆற்றில் விக்கி இருப்பதாக சிவ காஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்த சிவகாஞ்சி போலீசார் அந்த இடத்திற்கு சென்று நேற்று சுற்றி வளைத்து பிடித்தனர். விக்கி, பிள்ளயைார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 20. குருவிமலை பகுதியை சேர்ந்த வசந்தகுமார், 23. ஆகியோரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா போலீசார் பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.