திருத்தணி:திருத்தணி அடுத்த, நல்லாட்டூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, ஒரு அரசு பள்ளியில் பிளஸ்- 2 படித்து வருகிறார்.
இவர், அதே பகுதியைச் சேர்ந்த ராஜராஜன் என்கின்ற டென்னி, 28, என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
டென்னி மாணவியிடம், ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் அவரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், மாணவி, ஆறு மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரையடுத்து, திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து டென்னி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அப்புன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.