திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் ஊராட்சியில், அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளி, 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், 110 மாணவ -- மாணவியர் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளாக இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியர் இல்லாததால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் திணறி வந்தனர்.
இந்தாண்டும் ஆசிரியர் நியமிக்கப்படாத நிலையில், இன்னும் சில மாதங்களில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் சந்திக்க உள்ளதால், ஆசிரியரை நியமிக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.
அதையடுத்து, பள்ளியின் தலைமையாசிரியர் கற்பகத்தின் ஒப்புதலோடு நேற்று தற்காலிகமாக ஆங்கில ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதனால் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.