வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தேவகோட்டை:தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையில் கடந்த 11 நம் தேதி இரவு தாய், மகளை கொலை செய்துவிட்டு 50 தங்க நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.இதனால் கிராமம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு 200 மீட்டர் தூரத்தில் உள்ள ஆற்றங்கரை நாச்சியம்மன் கோவிலில் மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று மூலஸ்தான கதவை உடைத்து உள்ளே இருந்த உண்டியலை தூக்கி சென்று விட்டனர். மேலும் இரு உண்டியல்களை உடைத்து பார்த்து விட்டு போய்விட்டனர்.
இன்று மாலையில் பூஜைக்காக சென்ற பூசாரி தியாகராஜன் கோவிலுக்குள் சென்று உடைக்கப் பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். கண்ணங்கோட்டை பகுதியில் பாதுகாப்பு பணியிலும், தேடுதல் பணியிலும் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் கொள்ளையர்களின் கோவில் உண்டியல் திருட்டு போலீசாருக்கு ஷோ பெரிய சவாலாக அமைந்துள்ளது. இக்கோவில் வருஷாபிஷேகம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.